Tamil

Department of Tamil

திறன் வளர்க்கும் மேடை

பறைப்பயிற்சி

தமிழர்களின் ஆதி இசை பறை! பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள “பறை” ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடி தமிழ்ச் சமூகத்தின் சொத்து. உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம் எனவும் போற்றப்படுகின்றது. இலக்கியத்திலும் வாழ்வியலிலும் பறையின் பங்களிப்பு மிகுதி. இதனை மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக இப்பறைப்பயிற்சியை 2018 முதல் தமிழ் உயராய்வு நடுவம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றது. இவ்விசைக்கருவி சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம் முன்மாதிரிகளால் உருவானவை.

  • டன்டனக்கு டனக்குனக்கு
  • டன் டன் டன் டன்டனக்கு
  • ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
  • தக்கூக்கு தக்கூக்கு தக்கூக்கு டட்டா
போன்ற சொற்கட்டுகளில் பயிற்சி பெற்றனர். 2018-2019 ஆம் கல்வியாண்டில் 18 மாணவிகளும் 6 பேராசிரியர்களும் பறைப்பயிற்சிப் பெற்றுள்ளனர். 2019-2020 ஆம் கல்வியாண்டில் 17 மாணவிகளும் 2 பேராசிரியர்களும் பறைப்பயிற்சி பெற்றனர்.


பறைப்பயிற்சி காணொளி காட்சி